Wednesday, May 19, 2010

நான் முதன்முதலாய்........


நான் முதன்முதலாய்......(Part-1)


சுமார் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், நான் ஒரு நூற்பாலையில் (ஸிபின்னிங் மில்) பணியாளர் துறை அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.


தொழிலாளர் தரப்பிலிருந்து யூனியன் மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று தொழிலாளர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது.


அப்போதெல்லாம் நான் நீதிமன்றத்தை சினிமாவைத் தவிர நேரில் பார்த்தது கிடையாது. நான் பணியில் சேர்ந்தவுடன் இந்த வழக்கு விவகாரத்தை கவனிக்கும் விவகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டது.


ஒரு வெள்ளிக்கிழமையன்று வக்கீல் அலுவலகத்தில் இருந்து எதிர்வரும் திங்கள்டகிழமையன்று இந்த வழக்கு விபரமாக தொழிலாளர் நீதிமன்றத்திற்கு வருமாறு எனக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்ப்ட்டது. அடுத்த நாளான சனிக்கிழமையன்று நான் அலுவலகம் செல்லவில்லை. திங்கட்கிழமையன்று நேராக நீதிமன்றம் செல்வது எனது ஐடியா.


அந்த திங்கட்கிழமையும் வந்தது..........


காலை சீக்கிரமே எழுந்து (அன்னைக்கு மட்டும்தான்) குளித்து கோவிலுக்கு சென்று, அதற்கு முந்தைய ஆண்டு தீபாவளிக்கு தைத்த முழுக்கை சட்டை அணிந்து கையில் ஒரு பிரிஃப்கேஸ் எடுத்துகொண்டு (ஆமாங்க! காலி பொட்டிதான். ஒரு பந்தா வேண்டாமா , அதுக்குதான்) காலை 9.00 மணிக்கே "நானும் கோர்ட்டுக்குப் போறேன்" என்றுகோர்டை அடைந்தேன்.

அங்கு நடந்தவை ......

என் மனதை நொறுக்கிய சம்பவம்...

அடுத்த பதிவில்

(தொடரும்)

4 comments:

Jackiesekar said...

நல்லா எழுதுங்க.. வாழ்த்துக்கள்...

உங்கள் தளத்தின் என் பின்னுட்டம்தான் முதல் பின்னுட்டம் என்று நினைக்கின்றேன்...

அன்புடன்

ஜாக்கிசேகர்..

V GOVINDARAJAN said...

THIS IS A NOVEL WAY OF SOCIAL NETWORKING.
I URGE YOU TO SHARE YOUR HR EXPERIENCES, YOUR INSHGHTS INTO EMPLOYEE-EMPLOYER RELATIONSHIP, AND MOTIVATIONAL TOOLS FOR GREATER GOOD OF THE SOCIETY. PERHAPS IT WOULD BE A WAY OF GIVING BACK TO THE SOCIETY WHAT WE TAKE FOR GRANTED. ALL THE BEST IN ALL YOUR ENDEAVOURS..USHA & GOVI
WITH HARINI

S.V.சுப்பிரமணியன் said...

அன்பு ஜாக்கி சார்

வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் வாழ்த்துக்கள்தான் இளைய பதிவர்களுக்கு உற்சாக டானிக் (உற்சாக பானம் இல்ல).

மீண்டும் நன்றியுடன்

சுப்பிரமணியன்

அபி அப்பா said...

பதிவெல்லாம் ஏன் இத்தனை பெரிசா இருக்கு. இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்தா நல்லா இருக்கும் சுப்பு!

Post a Comment