எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..!
உங்களின் அனைவரின் அன்பு தங்கச்சியான தமன்னா தங்கத்திற்கு நான் கோவில் கட்டப் போகும் விஷயத்தை எனது நேற்றைய பதிவின் மூலம் தெரிந்த கொண்ட எனது தங்கமணி, நேற்று நான் அலுவலகம் முடிந்து வந்த என்னிடம் நாங்கள் வட இந்தியா டூர் போகும் போது வாங்கிய பூரிக் கட்டையை தேடித் தருமாறு கேட்டார்கள்.
இதன் பேக்ரவுண்டை அறியாத நானும் நமக்கு பூரி சாப்பிட செய்து கொடுக்கிறார் என்ற "பூரி" ப்பில் பரண் மீதிருந்த பூரி கட்டையை எடுத்துக் கொடுத்தேன்.
இதன் பேக்ரவுண்டை அறியாத நானும் நமக்கு பூரி சாப்பிட செய்து கொடுக்கிறார் என்ற "பூரி" ப்பில் பரண் மீதிருந்த பூரி கட்டையை எடுத்துக் கொடுத்தேன்.
பூரிக்கட்டையை கையில் வாங்கியவுடன் சொர்ணாக்காவாக மாறி அவர்கள் பார்த்த பார்வையிலேயே வயிறு கலக்கி மதியம் ஆபிஸ் canteen-ல் சாப்பிட்ட சாப்பாடு exit gate-ஐ நெருங்கியது. அதற்கு மேலும் என் வீட்டு தங்கமணி எனது உடலை பின்னி பெடலெடுத்துவிட்டார் என்று சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்.
எனது உடல் டோட்டல் டேமேஜ் ஆன நிலையில் பாடி டிங்கரிங்காக சென்றுள்ளதால் இனி மூன்று நாட்கள் பதிவு எதுவும் கொடுக்கமுடியாத நிலையில் உள்ளேன்.
இனி தமன்னா தங்கத்திற்கு நான் என் மனதில் மட்டும் கோவில் கட்டலாம் என்று இருக்கிறேன்.
எனது உடல் டோட்டல் டேமேஜ் ஆன நிலையில் பாடி டிங்கரிங்காக சென்றுள்ளதால் இனி மூன்று நாட்கள் பதிவு எதுவும் கொடுக்கமுடியாத நிலையில் உள்ளேன்.
இனி தமன்னா தங்கத்திற்கு நான் என் மனதில் மட்டும் கோவில் கட்டலாம் என்று இருக்கிறேன்.
என்னுடன் இத்திருப்பணியில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பிய மூத்த பதிவர் பனித்துளி சங்கர் அவர்களே! நீங்களும் உங்களும் மனதில் மட்டும் கோவில் கட்டுங்கள். இல்லாங்காட்டி நான் உங்களுக்காக மருத்துவமனையில் எனது பக்கத்து படுக்கையை ரிசர்வ் செய்ய வேண்டியிருக்கும்.
எப்படி இருந்த நான் .............
(எப்படியோ தலைப்பை பதிவுக்குள்ள கொண்டு வந்துட்டேனில்ல.........).

:
:
:
:
:
:
:
இப்படி ஆயிட்டேன்..!
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:

இப்படிக்கு
முன்னாள் தமன்னா தாசனான
சூப்பர் சுப்பு
6 comments:
தமன்னாவுக்கு கோவிலா... பூரி கட்டையோட விட்டாங்களே.... உங்க தங்கமணிக்கு பெரிய மனசு தான் போங்க...
ஹா ஹா ஹா... தங்கமணிகள் எல்லாருக்கும் பெருமை சேர்த்த சுப்பு அவர்களின் தங்கமணி வாழ்க வாழ்க....
(அந்த பூரி கட்டை எங்க வாங்கினாங்கன்னு உங்க தங்கமணி கிட்ட கொஞ்சம் விசாரிச்சி சொல்றீங்களா????)
தங்கமணியக்கா!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
தினமும் வந்து ஊக்கபடுத்துங்கள்.
சூப்பர் சுப்பு
தங்கமணியக்கா!
மனசுலு இவ்வளவு வஞ்சம் வச்சிருக்கும் நீங்க அப்பாவியா.....?
நீங்க இதே லெவல்ல இருந்தீங்கன்னா பிளாக் உலகில் உள்ள அனைத்து ரங்கமணிகளையும் கூட்டி பொதுக்குழு போட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்கிறேன்.
இப்படிக்கு
"உண்மையிலேயே அப்பாவி" ரங்கமணிகள் சங்கம் ஆரம்பிக்காலாமா என்று யோசிக்கும்
சூப்பர் சுப்பு
பெரிய பூசலார். மனசுக்குள்ள கோயில் கட்டுறார் . போய்யாங்க
Post a Comment