Thursday, May 27, 2010

எல்லாம் தருமத்திற்கே!


ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து " எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே ! " என்றார். ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம் "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக்கொண்டதிற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அடிங்கொய்யாலே! இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம் என சொன்னாராம்.
------------------------------------------------------------------------------------


பொறுப்பு அறிவித்தல் :

இந்த கதையை சொன்னவர் :
திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள்

கொஞ்சம் "மானே, தேனே " போட்டு எழுதியவர் : சூப்பர் சுப்பு

Saturday, May 22, 2010

மங்களூர் விமான விபத்து - அஞ்சலி

மங்களூர் விமான விபத்தில் மரணம் அடைந்த அனைவரின் குடும்பங்களுக்கு என் சார்பாகவும், சகபதிவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்....



மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக......



சூப்பர் சுப்பு

Friday, May 21, 2010

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..!



எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..!


உங்களின் அனைவரின் அன்பு தங்கச்சியான தமன்னா தங்கத்திற்கு நான் கோவில் கட்டப் போகும் விஷயத்தை எனது நேற்றைய பதிவின் மூலம் தெரிந்த கொண்ட எனது தங்கமணி, நேற்று நான் அலுவலகம் முடிந்து வந்த என்னிடம் நாங்கள் வட இந்தியா டூர் போகும் போது வாங்கிய பூரிக் கட்டையை தேடித் தருமாறு கேட்டார்கள்.

இதன் பேக்ரவுண்டை அறியாத நானும் நமக்கு பூரி சாப்பிட செய்து கொடுக்கிறார் என்ற "பூரி" ப்பில் பரண் மீதிருந்த பூரி கட்டையை எடுத்துக் கொடுத்தேன்.


பூரிக்கட்டையை கையில் வாங்கியவுடன் சொர்ணாக்காவாக மாறி அவர்கள் பார்த்த பார்வையிலேயே வயிறு கலக்கி மதியம் ஆபிஸ் canteen-ல் சாப்பிட்ட சாப்பாடு exit gate-ஐ நெருங்கியது. அதற்கு மேலும் என் வீட்டு தங்கமணி எனது உடலை பின்னி பெடலெடுத்துவிட்டார் என்று சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்.

எனது உடல் டோட்டல் டேமேஜ் ஆன நிலையில் பாடி டிங்கரிங்காக சென்றுள்ளதால் இனி மூன்று நாட்கள் பதிவு எதுவும் கொடுக்கமுடியாத நிலையில் உள்ளேன்.

இனி தமன்னா தங்கத்திற்கு நான் என் மனதில் மட்டும் கோவில் கட்டலாம் என்று இருக்கிறேன்.


என்னுடன் இத்திருப்பணியில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பிய மூத்த பதிவர் பனித்துளி சங்கர் அவர்களே! நீங்களும் உங்களும் மனதில் மட்டும் கோவில் கட்டுங்கள். இல்லாங்காட்டி நான் உங்களுக்காக மருத்துவமனையில் எனது பக்கத்து படுக்கையை ரிசர்வ் செய்ய வேண்டியிருக்கும்.


எப்படி இருந்த நான் .............
(எப்படியோ தலைப்பை பதிவுக்குள்ள கொண்டு வந்துட்டேனில்ல.........).








:


:


:


:


:


:


:






இப்படி ஆயிட்டேன்..!
:


:


:


:


:


:


:


:


:


:


:


:





இப்படிக்கு
முன்னாள் தமன்னா தாசனான

சூப்பர் சுப்பு

Thursday, May 20, 2010

தமன்னாவிற்கு ஒரு கோவில்



நமது அருமை அக்கா குஷ்பூவிற்கு கோவில் கட்டியது போல், உங்களது அன்பு தங்கச்சி (எனக்கு இல்ல) தமன்னாவிற்கும் கோவில் கட்டும் அரும்பணியில் தமன்னா தாசன் சூப்பர் சுப்பு ஆகிய நான் ஈடுபட்டுள்ளேன். இந்த அரும்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பும் தமன்னாஅன்பர்கள் உடனடியாக சூப்பர் சுப்புவை தொடர்பு கொள்ளவும். அன்பர்கள் கொடுக்கும் நன்கொடையைப் பொறுத்து அவர்களது பெயரின் அளவு தமன்னா கோவில் கல்வெட்டில் பொறிக்கப்படும்.

இப்படிக்கு
தமன்னாவிற்கு கோவில் கட்டி கூழ் ஊத்தப் போறேங்கோ என கொக்கரிக்கும்
தமன்னா தாசன் சூப்பர் சுப்பு

பின் குறிப்பு :
நீங்கள் எத்தினி கோடி நன்கொடை குடுத்தாலும் "தமன்னா தாசன்" எனும் பட்டத்தை மட்டும் இந்த சூப்பர் சுப்பு யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டான் என்பதை அறியவும்.

Wednesday, May 19, 2010

நான் முதன்முதலாய்........


நான் முதன்முதலாய்......(Part-1)


சுமார் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், நான் ஒரு நூற்பாலையில் (ஸிபின்னிங் மில்) பணியாளர் துறை அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.


தொழிலாளர் தரப்பிலிருந்து யூனியன் மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று தொழிலாளர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது.


அப்போதெல்லாம் நான் நீதிமன்றத்தை சினிமாவைத் தவிர நேரில் பார்த்தது கிடையாது. நான் பணியில் சேர்ந்தவுடன் இந்த வழக்கு விவகாரத்தை கவனிக்கும் விவகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டது.


ஒரு வெள்ளிக்கிழமையன்று வக்கீல் அலுவலகத்தில் இருந்து எதிர்வரும் திங்கள்டகிழமையன்று இந்த வழக்கு விபரமாக தொழிலாளர் நீதிமன்றத்திற்கு வருமாறு எனக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்ப்ட்டது. அடுத்த நாளான சனிக்கிழமையன்று நான் அலுவலகம் செல்லவில்லை. திங்கட்கிழமையன்று நேராக நீதிமன்றம் செல்வது எனது ஐடியா.


அந்த திங்கட்கிழமையும் வந்தது..........


காலை சீக்கிரமே எழுந்து (அன்னைக்கு மட்டும்தான்) குளித்து கோவிலுக்கு சென்று, அதற்கு முந்தைய ஆண்டு தீபாவளிக்கு தைத்த முழுக்கை சட்டை அணிந்து கையில் ஒரு பிரிஃப்கேஸ் எடுத்துகொண்டு (ஆமாங்க! காலி பொட்டிதான். ஒரு பந்தா வேண்டாமா , அதுக்குதான்) காலை 9.00 மணிக்கே "நானும் கோர்ட்டுக்குப் போறேன்" என்றுகோர்டை அடைந்தேன்.

அங்கு நடந்தவை ......

என் மனதை நொறுக்கிய சம்பவம்...

அடுத்த பதிவில்

(தொடரும்)

எனது பிளாக் பிறந்த கதை


எனது பிளாக் பிறந்த கதை

இத்தனை நாட்களாக மனிதவளத்துறையில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்த நான், எனது பணியிட நிர்வாகத்தில் ஏற்பட்ட சில மாறுதல்களின் காரணமாக "நீ இத்தனை நாள் பிடுங்கியதே போதும். இனி ஆணியே பிடுங்க வேண்டாம், கொஞ்ச நாள் பெஞ்சில் உக்காரு" என பணிக்கப்பட்டதால் (ஏங்க ஐ.டி. காரங்களே எங்களுக்கும் உக்கார பெஞ்ச் இருக்கில்ல) நாமும் பிளாக் சேவை புரிய உடனடியாக பிளாக் களத்தில் குதித்துள்ளேன்.


இனி நானும் பிளாக்குவேங்கோ........

சூப்பர் சுப்பு - வருகை

நான் பிளாக் உலகில் இன்றைக்கு தான் பிறந்த குழந்தை.
நமது பிளாக் குல தெய்வங்களான அனைத்து பிளாக்கர்களையும் வணங்கி எனது பிளாக்கை துவங்கியுள்ளேன்.

அனைவரும் நேரம் கிடைக்கும்போது எனது பிளாக்குற்கு வருகை புரியவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


சூப்பர் சுப்பு